குறள்: 1004 101. நன்றியில் செல்வம்

பொருட்பால்குடியியல்

எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்நச்சப் படாஅ தவன்

மு. வரதராசனார் உரை

பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.

சாலமன் பாப்பையா உரை

பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்?

மு. கருணாநிதி உரை

யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?

நன்றியில் செல்வம் அதிகாரம் முழுவதும்