குறள்: 1010 101. நன்றியில் செல்வம்

பொருட்பால்குடியியல்

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரிவறங்கூர்ந் தனைய துடைத்து

மு. வரதராசனார் உரை

புகழ் பொருந்திய செல்வர் உற்ற சிறிய வறுமை உலகத்தைக் காக்க வல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது.

சாலமன் பாப்பையா உரை

பிறர்க்குக் கொடுத்துப் புகழ்மிக்கவர் ஆகிய செல்வர்கள் சிறிது காலம் வறுமைப்பட நேர்ந்தால், அது மழை தரம் மேகமே வறுமைப்பட்டது போலாம்.

மு. கருணாநிதி உரை

சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின் நிழல்கூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும்

நன்றியில் செல்வம் அதிகாரம் முழுவதும்