குறள்: 108 11. செய்ந்நன்றியறிதல்
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று
மு. வரதராசனார் உரை
ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம்.
சாலமன் பாப்பையா உரை
ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்
மு. கருணாநிதி உரை
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது