குறள்: 1097 110. குறிப்பறிதல்

காமத்துப்பால்களவியல்

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்உறாஅர்போன் றுற்றார் குறிப்பு

மு. வரதராசனார் உரை

பகை கொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர் போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார் போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.

சாலமன் பாப்பையா உரை

(ஆம். இப்போது தெரிகிறது) கோபம் இல்லாமல் பேசும் பேச்சும், பகைவர் போன்ற பார்வையும், யாரே போலத் தோன்றி நட்பாவார் காட்டும் அடையாளங்கள்.

மு. கருணாநிதி உரை

பகையுணர்வு இல்லாத கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும், வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்

குறிப்பறிதல் அதிகாரம் முழுவதும்