குறள்: 1099 110. குறிப்பறிதல்

காமத்துப்பால்களவியல்

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்காதலார் கண்ணே உள

மு. வரதராசனார் உரை

புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும்.

சாலமன் பாப்பையா உரை

முன்பின் தெரியாதவர் போல, பொதுவாக பார்த்தப் பேசுவது காதலர்களிடம் இருக்கும் குணந்தான்.

மு. கருணாநிதி உரை

காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொள்வர்

குறிப்பறிதல் அதிகாரம் முழுவதும்