குறள்: 1102 111. புணர்ச்சி மகிழ்தல்

காமத்துப்பால்களவியல்

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழைதன்னோய்க்குத் தானே மருந்து

மு. வரதராசனார் உரை

நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.

சாலமன் பாப்பையா உரை

நோய்களுக்கு மருந்து பெரும்பாலும், அந்நோய்களுக்கு மாறான இயல்பை உடையவையே. ஆனால் இவள் தந்த நோய்க்கு இவளே மருந்து.

மு. கருணாநிதி உரை

நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் பல உள்ளன; ஆனால் காதல் நோயைத் தீர்க்கும் மருந்து அந்தக் காதலியே ஆவாள்

புணர்ச்சி மகிழ்தல் அதிகாரம் முழுவதும்