குறள்: 1106 111. புணர்ச்சி மகிழ்தல்

காமத்துப்பால்களவியல்

உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்கமிழ்தின் இயன்றன தோள்

மு. வரதராசனார் உரை

பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால் இவளுக்கு தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

இவளை அணைக்கும்போது எல்லாம் வாடிக் கிடந்த என் உயிர் தளிர்க்கும்படி என்னைத் தொடுவதால், இவளின் தோள்கள் அமிழ்தத்தில் செய்யப்பட்டவை போலும்.

மு. கருணாநிதி உரை

இந்த இளமங்கையைத் தழுவும் போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கு இவளின் அழகிய தோள்கள் அமிழ்தத்தினால் ஆனவை என்பதுதான் காரணம் போலும்

புணர்ச்சி மகிழ்தல் அதிகாரம் முழுவதும்