குறள்: 1110 111. புணர்ச்சி மகிழ்தல்

காமத்துப்பால்களவியல்

அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்செறிதோறும் சேயிழை மாட்டு

மு. வரதராசனார் உரை

செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல்,நூற் பொருள்களை அறிய அறிய அறியாதமைக் கண்டாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை

நூல்களாலும் நுண் அறிவாலும் அறிய அறிய முன்னைய நம் அறியாமை தெரிவதுபோல, நல்ல அணிகளை அணிந்திருக்கும் என் மனைவியுடன் கூடக் கூட அவள் மீது உள்ள என் காதற்சுவையும் புதிது புதிதாகத் தெரிகிறது.

மு. கருணாநிதி உரை

மாம்பழ மேனியில் அழகிய அணிகலன்கள் பூண்ட மங்கையிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் ஏற்படும் காதலானது, இதுவரை அறியாதவற்றைப் புதிதுபுதிதாக அறிவதுபோல் இருக்கிறது

புணர்ச்சி மகிழ்தல் அதிகாரம் முழுவதும்