குறள்: 1112 112. நலம் புனைந்து உரைத்தல்

காமத்துப்பால்களவியல்

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்பலர்காணும் பூவொக்கும் என்று

மு. வரதராசனார் உரை

நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன, என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய்.

சாலமன் பாப்பையா உரை

நெஞ்சே நான் ஒருவனே காணும் என் மனைவியின் கண்கள், பலருங் காணும் பூக்களைப் போல் இருக்கும் என்று எண்ணி மலர்களைக் கண்டு மயங்குகிறாயே! (இதோ பார்)

மு. கருணாநிதி உரை

மலரைக்கண்டு மயங்குகின்ற நெஞ்சமே! இவளுடைய கண்ணைப் பார்; பலரும் கண்டு வியக்கும் மலராகவே திகழ்கிறது

நலம் புனைந்து உரைத்தல் அதிகாரம் முழுவதும்