குறள்: 1115 112. நலம் புனைந்து உரைத்தல்

காமத்துப்பால்களவியல்

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்குநல்ல படாஅ பறை

மு. வரதராசனார் உரை

அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.

சாலமன் பாப்பையா உரை

என் மனைவி தன் மென்மையை எண்ணாமல் அனிச்சம்பூவை அதன் காம்பின் அடிப்பகுதியைக் களையாமல் அப்படியே சூடிவிட்டாள். அதனால் நொந்து வருந்தும் இவள் இடுப்பிற்கு நல்ல மங்கல ஒலி இனி ஒலிக்காது.

மு. கருணாநிதி உரை

அவளுக்காக நல்லபறை ஒலிக்கவில்லை; ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்; காரணம், அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக்கொண்டதுதான்

நலம் புனைந்து உரைத்தல் அதிகாரம் முழுவதும்