குறள்: 1122 113. காதற் சிறப்புரைத்தல்

காமத்துப்பால்களவியல்

உடம்பொ டுயிரிடை என்னமற் றன்னமடந்தையொ டெம்மிடை நட்பு

மு. வரதராசனார் உரை

இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.

சாலமன் பாப்பையா உரை

என் மனைவிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு, உடம்பிற்கும் உயிருக்கும் இடையே எத்தகைய உறவோ அத்தகையது.

மு. கருணாநிதி உரை

உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து தனித்தனியாக இருப்பதில்லை; அத்தகையதுதான் எமது உறவு

காதற் சிறப்புரைத்தல் அதிகாரம் முழுவதும்