குறள்: 1131 114. நாணுத் துறவுரைத்தல்

காமத்துப்பால்களவியல்

காமம் உழந்து வருந்தினார்க் கேமமடலல்ல தில்லை வலி

மு. வரதராசனார் உரை

காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை.

மு. கருணாநிதி உரை

காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக மடலூர்தலைத் தவிர, வலிமையான துணைவேறு எதுவுமில்லை

நாணுத் துறவுரைத்தல் அதிகாரம் முழுவதும்