குறள்: 1133 114. நாணுத் துறவுரைத்தல்

காமத்துப்பால்களவியல்

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்காமுற்றார் ஏறும் மடல்

மு. வரதராசனார் உரை

நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.

சாலமன் பாப்பையா உரை

நாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன்.

மு. கருணாநிதி உரை

நல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்

நாணுத் துறவுரைத்தல் அதிகாரம் முழுவதும்