குறள்: 1137 114. நாணுத் துறவுரைத்தல்

காமத்துப்பால்களவியல்

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்பெண்ணிற் பெருந்தக்க தில்

மு. வரதராசனார் உரை

கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.

சாலமன் பாப்பையா உரை

அதுதான் அவள் பெருமை; கடல் போலக் கரையில்லாத காதல் நோயை அவளும் அனுபவித்தாலும் மடல் ஊராது பொறுத்திருக்கும் பெண் பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தில் வேறு இல்லை.

மு. கருணாநிதி உரை

கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும்கூடப் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை

நாணுத் துறவுரைத்தல் அதிகாரம் முழுவதும்