குறள்: 1139 114. நாணுத் துறவுரைத்தல்

காமத்துப்பால்களவியல்

அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம்மறுகின் மறுகும் மருண்டு

மு. வரதராசனார் உரை

அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.

சாலமன் பாப்பையா உரை

என் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது.

மு. கருணாநிதி உரை

என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்!

நாணுத் துறவுரைத்தல் அதிகாரம் முழுவதும்