குறள்: 1170 117. படர்மெலிந் திரங்கல்

காமத்துப்பால்கற்பியல்

உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்நீந்தல மன்னோவென் கண்

மு. வரதராசனார் உரை

காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என்‌ கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை.

சாலமன் பாப்பையா உரை

என் மனம் போலவே என் கண்களும் என்னவர் இருக்கும் ஊருக்குச் செல்ல முடியுமானால், அவை கண்ணீர் வெள்ளத்தில் நீந்தமாட்டா.

மு. கருணாநிதி உரை

காதலர் இருக்குமிடத்துக்கு என் நெஞ்சத்தைப் போலச் செல்ல முடியுமானால், என் கருவிழிகள், அவரைக் காண்பதற்குக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது

படர்மெலிந் திரங்கல் அதிகாரம் முழுவதும்