குறள்: 1207 121. நினைந்தவர் புலம்பல்

காமத்துப்பால்கற்பியல்

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்உள்ளினும் உள்ளம் சுடும்

மு. வரதராசனார் உரை

( காதலரை ) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ?

சாலமன் பாப்பையா உரை

அந்த நாள்களின் நினைவுகளை மறவாமல் நினைத்தாலும் என் நெஞ்சு சுடும்; அப்படி இருக்க மறந்தால் வாழ்வது எப்படி?

மு. கருணாநிதி உரை

மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! பினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?

நினைந்தவர் புலம்பல் அதிகாரம் முழுவதும்