குறள்: 1212 122. கனவுநிலை உரைத்தல்

காமத்துப்பால்கற்பியல்

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க்குயலுண்மை சாற்றுவேன் மன்

மு. வரதராசனார் உரை

கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்.

சாலமன் பாப்பையா உரை

கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்.

மு. கருணாநிதி உரை

நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்

கனவுநிலை உரைத்தல் அதிகாரம் முழுவதும்