குறள்: 123 13. அடக்கம் உடைமை

அறத்துப்பால்இல்லறவியல்

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்தாற்றின் அடங்கப் பெறின்

மு. வரதராசனார் உரை

அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.

சாலமன் பாப்பையா உரை

அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.

மு. கருணாநிதி உரை

அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்

அடக்கம் உடைமை அதிகாரம் முழுவதும்