குறள்: 1242 125. நெஞ்சொடு கிளத்தல்

காமத்துப்பால்கற்பியல்

காத லவரிலர் ஆகநீ நோவதுபேதமை வாழியென் நெஞ்சு

மு. வரதராசனார் உரை

என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!

சாலமன் பாப்பையா உரை

என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே.

மு. கருணாநிதி உரை

அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க

நெஞ்சொடு கிளத்தல் அதிகாரம் முழுவதும்