குறள்: 1245 125. நெஞ்சொடு கிளத்தல்
செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்உற்றால் உறாஅ தவர்
மு. வரதராசனார் உரை
நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியுமோ?
சாலமன் பாப்பையா உரை
நெஞ்சே! நான் அவர்மீது அன்பு காட்டியும், என்மீது அன்பு காட்டாத அவரை, நம்மை வெறுத்தவர் என்று எண்ணிக் கைவிடும் உள்ள உறுதி எனக்கு உண்டோ?
மு. கருணாநிதி உரை
நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா?