குறள்: 1249 125. நெஞ்சொடு கிளத்தல்
உள்ளத்தார் காத லவராக உள்ளிநீயாருழைச் சேறியென் நெஞ்சு
மு. வரதராசனார் உரை
என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?
சாலமன் பாப்பையா உரை
என் நெஞ்சே! நம் அன்பர் நம் மனத்திற்குள்ளேயே இருக்க, நீ அவரைத் தேடி எவரிடம் போகிறாய்?
மு. கருணாநிதி உரை
உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?