குறள்: 1258 126. நிறையழிதல்

காமத்துப்பால்கற்பியல்

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்பெண்மை உடைக்கும் படை

மு. வரதராசனார் உரை

நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக இருப்பது, பல மாயங்களில் வல்ல, கள்வனான காதலரடைய பணிவுடைய மொழி அன்றோ?

சாலமன் பாப்பையா உரை

என் மன அடக்கமாகிய கோட்டையை அழிக்கும் ஆயுதம், பல பொய்த் தொழிலும் வல்ல இந்த மனத்திருடனின் பணிவான சொற்கள் அன்றோ!

மு. கருணாநிதி உரை

நம்முடைய பெண்மை எனும் உறுதியை உடைக்கும் படைக்கலனாக இருப்பது, பல மாயங்களில் வல்ல கள்வராம் காதலரின் பணிவான பாகுமொழியன்றோ?

நிறையழிதல் அதிகாரம் முழுவதும்