குறள்: 1269 127. அவர்வயின் விதும்பல்

காமத்துப்பால்கற்பியல்

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்வருநாள்வைத் தேங்கு பவர்க்கு

மு. வரதராசனார் உரை

தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல ( நெடிதாக) கழியும்.

சாலமன் பாப்பையா உரை

தொலைதூரம் சென்று தன் கணவன் வரும் நாளை எண்ணி வருந்தும் பெண்களுக்கு ஒருநாள் பலநாள் போல நெடிதாகத் தோன்றும்.

மு. கருணாநிதி உரை

நெடுந்தொலைவு சென்ற காதலர் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து ஏங்குபவர்க்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றும்

அவர்வயின் விதும்பல் அதிகாரம் முழுவதும்