குறள்: 1273 128. குறிப்பறிவுறுத்தல்

காமத்துப்பால்கற்பியல்

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தைஅணியில் திகழ்வதொன் றுண்டு

மு. வரதராசனார் உரை

( கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை

கோக்கப்பட்ட பளிங்கிற்குள் கிடந்து வெளியே தெரியும் நூலைப் போல இவளின் அழகிற்குள் கிடந்து வெளியே தெரியும் குறிப்பு ஒன்று உண்டு.

மு. கருணாநிதி உரை

மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது

குறிப்பறிவுறுத்தல் அதிகாரம் முழுவதும்