குறள்: 1275 128. குறிப்பறிவுறுத்தல்

காமத்துப்பால்கற்பியல்

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்தீர்க்கும் மருந்தொன் றுடைத்து

மு. வரதராசனார் உரை

காதலி என்னை நோக்கி செய்து விட்டுச் சென்ற கள்ளமான குறிப்பு, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் மருந்து ஒன்று உடையதாக இருக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை

நெருங்கி வளையல்களை அணிந்த என் மனைவி நான் மட்டுமே அறிய மறைத்துக் காட்டும் ஒரு குறிப்பில் என் பெருங்கவலையைத் தீர்க்கும் மருந்து ஒன்றும் உண்டு.

மு. கருணாநிதி உரை

வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் வடிவழகியின் குறும்புத்தனமான பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது

குறிப்பறிவுறுத்தல் அதிகாரம் முழுவதும்