குறள்: 1289 129. புணர்ச்சி விதும்பல்

காமத்துப்பால்கற்பியல்

மலரினும் மெல்லிது காமம் சிலரதன்செவ்வி தலைப்படு வார்

மு. வரதராசனார் உரை

காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.

சாலமன் பாப்பையா உரை

காதல் இன்பம் மலரைவிட மென்மையானது. அதை அறிந்து அனுபவிப்பதற்கு ஏற்ற இடம், காலம், தேவையானவை எல்லாம் பெற்றுக் காதல் இன்பத்தின் நலனை அனுபவிப்பவர் இவ்வுலகில் சிலரே

மு. கருணாநிதி உரை

காதல் இன்பம், மலரைவிட மென்மையானது அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்

புணர்ச்சி விதும்பல் அதிகாரம் முழுவதும்