குறள்: 14 2. வான்சிறப்பு
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால்
மு. வரதராசனார் உரை
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்
சாலமன் பாப்பையா உரை
மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்
மு. கருணாநிதி உரை
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்