குறள்: 142 15. பிறனில் விழையாமை

அறத்துப்பால்இல்லறவியல்

அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடைநின்றாரிற் பேதையா ரில்

மு. வரதராசனார் உரை

அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

பாவ வழியில் நடக்கும் மனிதருள் எல்லாம், அடுத்தவன் மனைவியை விரும்பி அவன் வாசலில் நிற்கும் மூடனைப் போன்ற கடை நிலை மனிதர் வேறு இல்லை

மு. கருணாநிதி உரை

பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்

பிறனில் விழையாமை அதிகாரம் முழுவதும்