குறள்: 154 16. பொறையுடைமை

அறத்துப்பால்இல்லறவியல்

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமைபோற்றி யொழுகப் படும்

மு. வரதராசனார் உரை

நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

சான்றாண்மை நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும்

மு. கருணாநிதி உரை

பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்

பொறையுடைமை அதிகாரம் முழுவதும்