குறள்: 158 16. பொறையுடைமை
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்தகுதியான் வென்று விடல்
மு. வரதராசனார் உரை
செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.
மு. கருணாநிதி உரை
ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்