குறள்: 16 2. வான்சிறப்பு

அறத்துப்பால்பாயிரவியல்

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண் பரிது

மு. வரதராசனார் உரை

வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது

சாலமன் பாப்பையா உரை

மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்

மு. கருணாநிதி உரை

விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்

வான்சிறப்பு அதிகாரம் முழுவதும்