குறள்: 173 18. வெஃகாமை

அறத்துப்பால்இல்லறவியல்

சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரேமற்றின்பம் வேண்டு பவர்

மு. வரதராசனார் உரை

அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.

சாலமன் பாப்பையா உரை

அறத்தால் வரும் நிலையான இன்பங்களை விரும்புவோர் நிலையில்லாத இன்பத்தை விரும்பிப் பிறர் பொருளைக் கவரும் அறம் இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார்.

மு. கருணாநிதி உரை

அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார்

வெஃகாமை அதிகாரம் முழுவதும்