குறள்: 176 18. வெஃகாமை

அறத்துப்பால்இல்லறவியல்

அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்பொல்லாத சூழக் கெடும்

மு. வரதராசனார் உரை

அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை

அருளை விரும்பிக் குடும்ப வாழ்வில் இருப்பவன், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுப் பொல்லாதது செய்தால், அவன் கெட்டுப் போவான்.

மு. கருணாநிதி உரை

அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும்

வெஃகாமை அதிகாரம் முழுவதும்