குறள்: 181 19. புறங்கூறாமை

அறத்துப்பால்இல்லறவியல்

அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்புறங்கூறா னென்றல் இனிது

மு. வரதராசனார் உரை

ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.

சாலமன் பாப்பையா உரை

ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது

மு. கருணாநிதி உரை

அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது

புறங்கூறாமை அதிகாரம் முழுவதும்