குறள்: 183 19. புறங்கூறாமை

அறத்துப்பால்இல்லறவியல்

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்அறங்கூறும் ஆக்கந் தரும்

மு. வரதராசனார் உரை

புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்‌‌.

சாலமன் பாப்பையா உரை

காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.

மு. கருணாநிதி உரை

கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று

புறங்கூறாமை அதிகாரம் முழுவதும்