குறள்: 19 2. வான்சிறப்பு

அறத்துப்பால்பாயிரவியல்

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்வானம் வழங்கா தெனின்

மு. வரதராசனார் உரை

மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.

சாலமன் பாப்பையா உரை

மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.

மு. கருணாநிதி உரை

இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்

வான்சிறப்பு அதிகாரம் முழுவதும்