குறள்: 196 20. பயனில சொல்லாமை

அறத்துப்பால்இல்லறவியல்

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்மக்கட் பதடி யெனல்

மு. வரதராசனார் உரை

பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.

மு. கருணாநிதி உரை

பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்

பயனில சொல்லாமை அதிகாரம் முழுவதும்