குறள்: 198 20. பயனில சொல்லாமை
அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்பெரும்பய னில்லாத சொல்
மு. வரதராசனார் உரை
அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்
சாலமன் பாப்பையா உரை
அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.
மு. கருணாநிதி உரை
அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்