குறள்: 233 24. புகழ்

அறத்துப்பால்இல்லறவியல்

ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்பொன்றாது நிற்பதொன் றில்

மு. வரதராசனார் உரை

உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை.

மு. கருணாநிதி உரை

ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை

புகழ் அதிகாரம் முழுவதும்