குறள்: 239 24. புகழ்
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலாயாக்கை பொறுத்த நிலம்
மு. வரதராசனார் உரை
புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.
சாலமன் பாப்பையா உரை
புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்.
மு. கருணாநிதி உரை
புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்