குறள்: 300 30. வாய்மை

அறத்துப்பால்துறவறவியல்

யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும்வாய்மையின் நல்ல பிற

மு. வரதராசனார் உரை

யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.

சாலமன் பாப்பையா உரை

சிறந்தவை என்று நான் கண்டு அறிந்த நூல்களுள் சொல்லப்பட்டவற்றுள், உண்மையைவிட, நல்லதாகச் சொல்லப்பட்ட அறம் வேறு ஒன்றும் இல்லை.

மு. கருணாநிதி உரை

வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்

வாய்மை அதிகாரம் முழுவதும்