குறள்: 321 33. கொல்லாமை

அறத்துப்பால்துறவறவியல்

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்பிறவினை எல்லாந் தரும்

மு. வரதராசனார் உரை

அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.

சாலமன் பாப்பையா உரை

அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.

மு. கருணாநிதி உரை

எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும் கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்

கொல்லாமை அதிகாரம் முழுவதும்