குறள்: 324 33. கொல்லாமை

அறத்துப்பால்துறவறவியல்

நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்கொல்லாமை சூழும் நெறி

மு. வரதராசனார் உரை

நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.

சாலமன் பாப்பையா உரை

நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.

மு. கருணாநிதி உரை

எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்

கொல்லாமை அதிகாரம் முழுவதும்