குறள்: 331 34. நிலையாமை
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்புல்லறி வாண்மை கடை
மு. வரதராசனார் உரை
நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.
சாலமன் பாப்பையா உரை
நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது.
மு. கருணாநிதி உரை
நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்