குறள்: 333 34. நிலையாமை
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்அற்குப ஆங்கே செயல்
மு. வரதராசனார் உரை
செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
நிலையாத இயல்பினை உடையது செல்வம்; அது கிடைத்தால் நிலையான அறங்களைச் செய்க.
மு. கருணாநிதி உரை
நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்