குறள்: 338 34. நிலையாமை

அறத்துப்பால்துறவறவியல்

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றேஉடம்போ டுயிரிடை நட்பு

மு. வரதராசனார் உரை

உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை

உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.

மு. கருணாநிதி உரை

உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்

நிலையாமை அதிகாரம் முழுவதும்