குறள்: 340 34. நிலையாமை
புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்துச்சி லிருந்த உயிர்க்கு
மு. வரதராசனார் உரை
(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ.
சாலமன் பாப்பையா உரை
உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!
மு. கருணாநிதி உரை
உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது