குறள்: 342 35. துறவு

அறத்துப்பால்துறவறவியல்

வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்ஈண்டியற் பால பல

மு. வரதராசனார் உரை

துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.

சாலமன் பாப்பையா உரை

பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை விரும்பினால் துறவு கொள்க.

மு. கருணாநிதி உரை

ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்

துறவு அதிகாரம் முழுவதும்