குறள்: 36 4. அறன் வலியுறுத்தல்

அறத்துப்பால்பாயிரவியல்

அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றதுபொன்றுங்கால் பொன்றாத் துணை

மு. வரதராசனார் உரை

இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.

சாலமன் பாப்பையா உரை

முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.

மு. கருணாநிதி உரை

பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்

அறன் வலியுறுத்தல் அதிகாரம் முழுவதும்